06,Apr 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

சசிகலா மற்றும் அவரது உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெ தீபா போலீஸில் புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான ஜெ தீபாவும், தீபக்கும்தான் ஜெயலலிதாவின் வாரிசுகள் என சட்டப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெ தீபா கடந்த15 ஆம் தேதி ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்குள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை செய்ய வந்த ஹரிஹரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டது

இதையடுத்து ஜெ தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் சேர்ந்து தன்னை பூஜை செய்ய விடாமல் தடுத்தோடு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஹரிஹரன் போலீஸில் புகார் அளித்தார். பிள்ளையார் கோவிலில் பூஜை செய்வதற்கான செலவையும் அதற்கான சம்பளத்தையும் சசிகலா கொடுத்து

வருவதாக கூறினார்


இந்நிலையில் ஜெ தீபா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் ஹரிஹரன் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை என்றும், இனிமேல் போயஸ் கார்டனில் உள்ள விநாயகர் சிலையை தாங்களே பராமரித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களின் காழ்ப்புணர்ச்சியால் தனது உயிருக்கும் உடமைக்கும் ஆபத்து உள்ளதாகவும் தீபா தெரிவித்துள்ளார்.

மேலும் தனது பாட்டி வீடான வேதா இல்லத்தில் சசிகலாவோ அல்லது அவரது உறவினர்களோ உரிமை கொண்டாட அனுமதிக்க முடியாது என்றும் சசிகலா மற்றும் அவரை சார்ந்தவர்களால் தங்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதால் தனக்கும், தனது கணவருக்கும், தனது குழந்தைக்கும், மற்றும் குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தனது புகாரில் தெரிவித்துள்ளா

சசிகலா மற்றும் அவரது உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெ தீபா போலீஸில் புகார் அளித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 




சசிகலா மற்றும் அவரது உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெ தீபா போலீஸில் புகார்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு