கடந்த 2006ம் ஆண்டு கும்பகோணத்தில் 'செல்லமடி நீ எனக்கு' என்ற டைட்டில் சாங்க், ஒரு யானையுடன் ஷூட் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த யானை என்னை தாக்கியது. ஆனால் இதுவரை அந்த யானை மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. யானை தாக்கியதில் எனக்கு ஏழு இடங்களில் எறும்பு முறிவு ஏற்பட்டது.
யானை தாக்கியதில் நான் மயங்கி விட்டேன், உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் தான். யானை என் மீது கால் வைத்தது என்று நினைத்தேன். ஆனால் அது தும்பிக்கையால் என்னை நசுக்கியது. வலி தாங்க முடியாமல் நான் துடித்துக் கொண்டிருந்தேன். உடனே அங்கிருந்த டான்சர்கள் என்னை தூக்கிக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த டான்சர்களில் ஒருவன், நான் வலியில் துடித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு உதவி செய்வது போல என்னுடைய மார்பில் கை வைத்து சுகம் கண்டு கொண்டிருந்தான்.
என் வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்றால் இதைத்தான் நான் சொல்வேன். அந்த நேரத்தில் நான் கிட்டத்தட்ட பிணம் மாதிரி இருந்தேன், பினத்தை கூடவா இப்படி செய்வார்கள்? என் மார்பில் கை வைத்த அந்த டான்சர் யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அதை நான் உணர்ந்தேன். அந்த நேரத்தில் கும்பகோணத்தில் நான் ரொம்பவே தவித்துப் போனேன். அதிலிருந்து மீண்டு வர எனக்கு ரொம்ப நாளாச்சு என்று கண்ணீரோடு நடிகை சந்தியா பேசியுள்ளார்.
0 Comments
No Comments Here ..