03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

சந்திரயான்-3 விண்கலம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு

நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் 3 விண்கலம் நிலவில் நாளை மாலை 6.04-க்கு தரையிறங்கும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து நிலவுக்கு விண்கலனை அனுப்பும் 4 ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. அதேநேரம் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கும் முதல் நாடாக இந்தியா உள்ளது.

இதற்கிடையே சந்திரயான்-3 விண்கலம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில், சந்திரயான்-3 விண்கலம் முதன் முதலில் பதிவிட்ட புகைப்படம் என்று நபர் ஒருவர் டீ ஆற்றுவதைப்போன்ற படத்தை பிரகாஷ்ராஜ் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு சர்ச்சையான நிலையில், விஞ்ஞானிகளின் தியாகத்தை பிரகாஷ்ராஜ் கொச்சை படுத்துவதாகவும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.


இந்த சூழலில் இந்து அமைப்பினர் பிரகாஷ்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கர்நாடகாவில் புகார் மனுவை அளித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பிரகாஷ் ராஜ் மீது பாகல்கோட் மாவட்ட காவல்துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரகாஷ் ராஜை ஆதரித்தும் விமர்சித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக சந்திரயான் 3 விண்கலன் திட்டமானது ஜனவரி 2020- இல் ஆரம்பிக்கப்பட்டு 2021 இல் விண்ணுக்கு செலுத்தலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா பிரச்னை காரணமாக தாமதம் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 நிலவை நோக்கி செலுத்தப்பட்டது

 





சந்திரயான்-3 விண்கலம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு