03,May 2024 (Fri)
  
CH
விளையாட்டு

கடும் சவால்களுக்கு மத்தியிலேயே இலங்கையர்களுக்கு விசா கிடைத்தது

ட்ரின்பாகோ 2023 பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் அமெரிக்கா ஊடாக ட்ரினிடாட் செல்வதற்கு விசா பெறுவதற்கு கடும் பிரயத்தனம் எடுக்க நேரிட்டத்தாக தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வா தெரிவித்தார்.

பொதுநலவாய இளையோர் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு ஒரு தினத்திற்கு முன்னதாக விசா கிடைத்தால், இலங்கை வீரர்களில் சிலர் ட்ரினிடாட்  சென்ற சூட்டுடன் போட்டிக் களத்தில் குதிக்க நேரிட்டதாக தேசிய ஒலிம்பிக் இல்ல ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (22) பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய மெக்ஸ்வெல் டி சில்வா சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பா வழியாக போர்ட் ஒவ் ஸ்பெய்ன் செல்லும் நோக்குடன் வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் செங்கென் விசா பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டபோதிலும் நேர்காணல்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் கடைசி நேரத்தில் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் இதன் காரணமாக வீர, வீராங்கனைகளும் அதிகாரிகளும் மனம்  நொந்துபோனதாகவும் அவர் கூறினார்.



'செங்கென் விசா நிராகரிக்கப்பட்டதால் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. பிரித்தானியா வழியாக செல்ல எடுத்த முயற்சிகளும் விமான டிக்கெட்கள் இல்லாததால் கைகூடவில்லை. ஆனால், இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தயவால் கடைசி நேரத்திலாவது மூவரைத் தவிர மற்றையவர்களுக்கு விசா கிடைத்தது. மெய்வல்லுநர் அணியின் முகாமையாளர், பயிற்றுநர், வீராங்கனைகளுக்கு பொறுப்பாக நியமிக்கட்டிருந்த பெண் அதிகாரி ஆகியோருக்கே அமெரிக்க விசா மறுக்கப்பட்டிருந்தது. அதற்கு ஒலிம்பிக் குழு பொறுப்பாளி அல்ல. இந்த உண்மை தெரியாதவர்கள் தேவையயில்லாமல் விமர்சித்தனர். 





கடும் சவால்களுக்கு மத்தியிலேயே இலங்கையர்களுக்கு விசா கிடைத்தது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு