24,Dec 2025 (Wed)
  
CH
சினிமா

தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளேன்-கிரண்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' படத்தில் இன்னும் எத்தனை பேருப்பா இருக்கீங்க என கேட்கும் அளவிற்கு எக்கச்சக்கமான நடிகர்கள் பட்டாளம் இந்தப்படத்தில் நடித்து வருகின்றனர். இவ்வளவு பேரை வைத்து லோகேஷ் கனகராஜ் எப்படி இந்தப்படத்தை இயக்கிருப்பார் என யோசித்தாலே மலைப்பாக உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகை ஒருவரும் 'லியோ' படத்தில் தானும் இருப்பதாக தெரிவித்துள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் கிரண். கமலின் 'அன்பே சிவன்', விக்ரமின் 'ஜெமினி', வின்னர், நியூ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கோலிவுட் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் அதன்பின்னர் பெரிதாக எந்தப்படங்களிலும் நடிக்கவில்லை

பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷாலின் 'ஆம்பள' படத்தில் ஆண்ட்டி கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து எந்தப்படத்திலும் நடிக்காமல் இருந்த கிரண், அவ்வப்போது தனது பிகினி போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் கோவாவில் இருந்தப்படி நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள நடிக்கி கிரணிடம் தொகுப்பாளர் உங்களை பற்றி ஏதாவது ரூமர் சொல்லுங்கள் கேட்டார். அதற்கு அவர் தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளேன். அதில் 'லியோ' படத்திலும் ஸ்பெஷல் கேரக்டரில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார். இது உண்மையா என கேட்டதற்கு, நீங்களே கண்டுபிடிச்சுகோங்க என கூறிவிட்டார்


அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வர கிரணும் இந்தப்படத்தில் நடித்துள்ளாரா என ரசிகர்கள் ஷாக்குடன் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே 'லியோ' படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், குக் வித் கோமாளி பாலா உள்ளிட்ட எக்கச்சக்கமானோர் இணைந்து நடித்துள்ளனர்.

கோலிவுட் சினிமா உலகினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள 'லியோ' படம் மூலம் விஜய், லோகேஷ் கனகராஜ் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்து அடுத்தடுத்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப்படத்தை முழுக்க முழுக்க தன்னுடைய பாணியில் இயக்கிவுள்ளார் லோகேஷ். மேலும் 'லியோ' படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது




தமிழ் சினிமாவில் நான்கு படங்களில் கமிட் ஆகியுள்ளேன்-கிரண்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு