இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். 'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் கதை கேட்காமலேயே சந்திரமுகியாக நடிக்க கங்கனா ஒப்புக் கொண்டதாக இயக்குனர் பி. வாசு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கங்கனாவிடம் இந்திப் படம் ஒன்றின் கதையை சொல்ல சென்றதாகவும் அப்போது 'சந்திரமுகி- 2' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதையும் அதில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிக்க யாரையும் முடிவு செய்யவில்லை என்று தெரிந்ததும் நானே நடிக்கிறேன் என்று கங்கனா ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது
0 Comments
No Comments Here ..