சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சுவாசக் கோளாறுகள் ஏற்படுத்தி உயிரிழப்பை உண்டாக்கும் இந்த வைரசினால் இதுவரை சீனாவில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதிலும் 15 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியவை இந்த வைரஸ் நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இதற்கிடையே, மத்திய ஆயுர்வேத அமைச்சகம் ‘யுனானி மருந்துகள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறியிலிருந்து பாதுகாப்பதில் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்’ என்பதை விரிவாகக் கூறும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
‘கொரோனா வைரஸ் தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான ஹோமியோபதி’ என்ற தலைப்பில் உள்ள அந்த அறிக்கையில், நாட்டு மருத்துவம் எவ்வாறு நோய்த்தொற்றை தடுக்க உதவுகிறது? என்பது பற்றி விளக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நோய்த்தொற்று ஏற்பட்டால் மேற்கொள்ள ஆயுர்வேத நடைமுறைகள் மற்றும் ஹோமியோபதி மருந்தான ‘ஆர்சனிகம் ஆல்பம் 30’ஐ மூன்று நாட்களுக்கு தினமும் வெறும் வயிற்றில் ஒரு தடுப்பு மருந்தாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் ஆயுர்வேத அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என நெட்டிசன்கள் கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பி வருகின்றனர்.
‘எந்தவொரு ஹோமியோபதி மாணவரும் அல்லது யுனானி மருத்துவ மாணவரும் பாடத்திட்டத்தில் ஏதேனும் நுண்ணுயிரியலை (வைராலஜியை ஒதுக்கி விடுங்கள்) படித்தார்களா என்பதை அறிய விரும்புகிறேன்’ என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இது உண்மையா ?! ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகளை இங்கு கூறப்பட்டுள்ளபடி தடுப்பு நடவடிக்கைகளாக உட்கொள்ள முடியுமா?
ஆயுர்வேத, ஹோமியோபதி மற்றும் யுனானி மருந்துகள் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என அறியப்படாமலே கொரோனா வைரஸை தடுப்பதற்கு அறிவுறுத்தப்படுகிறது, இது எதை அடிப்படையாகக் கொண்டது? என பலர் தங்கள் எதிர் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..