01,May 2024 (Wed)
  
CH
விளையாட்டு

பாகிஸ்தானிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை வீரர்கள்

இந்த விபரத்தை  ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இலங்கை குழாத்தில் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சிரேஷ்ட வீரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு வாய்ப்பு வழக்கப்படவில்லை.

உபாதைக்குள்ளான வனிந்து ஹசரங்க, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க ஆகியோருக்குப் பதிலாக பினுர பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான் ஆகியோர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ள குசல் ஜனித் பெரேரா பூரண ஆரோக்கியம் பெற்றதும் குழாத்தில் இணைந்துகொள்வார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.


இந்தியாவில் இந்த வருடம் அக்டோபர் மாதம் உலகக் கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால் இம்முறை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளும் 50 ஓவர்களாக நடத்தப்படுகிறது.

கடந்த வருடம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற இருபது 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான அணிக்கு தலைமை தாங்கிய தசுன் ஷானக்க, 50 ஓவர் அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உதவித் தலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.



ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் ஏ குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பி குழுவிலும் இடம்பெறுகின்றன.

பாகிஸ்தானுக்கும் நேபாளத்துக்கும் இடையில் முல்தானில் புதன்கிழமை (30) நடைபெறவுள்ள போட்டியுடன் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை குழாம்


தசுன் ஷானக்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் (உதவித் தலைவர்), சரித் அசலன்க, தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, மதீஷ பத்திரண, கசுன் ராஜித்த, துஷான் ஹேமன்த, பினுர பெர்னாண்டோ, ப்ரமோத் மதுஷான்.

 




பாகிஸ்தானிலும் இலங்கையிலும் கூட்டாக நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை வீரர்கள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு