29,Apr 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

சீனாவின் புதிய வரைபடம் தொடர்பாக மோடி பேச வேண்டும் –ராகுல் காந்தி

அருணாச்சல பிரதேசத்தை சேர்த்து சீனா புதிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கூறியதாவது:- அருணாச்சல பிரதேசம் மாநிலத்தை இணைத்து சீனா 2023 வரைபடத்தை வெளியிட்டுள்ளது. லடாக்கில் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று மோடி கூறுவது பொய் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.


சீனா அத்துமீறி நடந்த கொண்டது ஒட்டுமொத்த லடாக்கிற்கே தெரியும். இந்த வரைபடம் விசயம் முக்கியமானது. அவர்கள் நமது நிலத்தை எடுத்து விட்டார்கள். இதுகுறித்து பிரதமர் மோடி ஏதாவது பேச வேண்டும். ராகுல் காந்தி இன்று கர்நாடகா செல்ல இருக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து புறப்பட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.




சீனாவின் புதிய வரைபடம் தொடர்பாக மோடி பேச வேண்டும் –ராகுல் காந்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு