இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு களவாணி படம் வெளியானது. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஓவியா அறிமுகமாகி விமலுக்கு ஜோடியானார்.
இவர்களுடன் சரண்யா, பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இளவரசு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.
இதையடுத்து மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர் கூடம், யாமிருக்க பயமேம், 90 ml உள்ளிட்ட திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
மேலும் நடிகை ஓவியா பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். அந்த சீசனின் அவருக்காக ரசிகர்கள் ஓவியா ஆர்மியை உருவாக்கினர். இணையத்தில் பேசுபொருளாக இருந்தார் ஓவியா.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழில் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
கடந்த 2019 ஆம் ஆண்டில் 90எம்எல், கணேஷா மீண்டும் சந்திப்போம், காஞ்சனா 3, களவானி 2 போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. இதில் காஞ்சனா 3 படம் மட்டும் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றது.
சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொள்வது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஓவியா, நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன், கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தால் போதும் என்று கூறிய அவர் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த பதிலை கேட்ட ரசிகர்கள் பலர் பலவிதமான கேள்விகை ஓவியாவை நோக்கி எழுப்பிக்கொண்டே இருந்தனர். அதில் ஒன்று ஓவியா , தன்பாலின ஈர்ப்பாளரா என்ற கேள்வி.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஓவியாவிடம், நீங்கள் தன்பாலின ஈர்ப்பாளரா என்று கமன்ட்கள் வருகிறது அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அவர், இது போன்ற கமன்ட்களை கேட்கும் போது ஒரு மாதிரியா இருக்கும். ஆனால் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன். நான் லெஸ்பியன் கிடையாது என்றும் ஓவியா கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..