02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

பாகிஸ்தானை எதிர்த்தாடும் அறிமுக அணி நேபாளம்

பாகிஸ்தானின் முதல்தானில் இன்று ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஏ குழுவில் இடம்பெறும் பாகிஸ்தானை அறிமுக அணி நேபாளம் எதிர்த்தாடவுள்ளது. 

இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டி தனது சொந்த மண்ணில் நடைபெறுவதாலும் நேபாளளத்தை விட பலம் வாய்ந்தது என்பதாலும் பாகிஸ்தான் இலகுவாக வெற்றிபெற்று சுப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானை முதல் தடவையாக சந்திப்பதால் நேபாளம் பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளவுள்ளது.

பத்து நாடுகள் பங்குபற்றிய ஆசிய கிரிக்கெட் பேரவை ஆடவர் ப்றீமியர் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சம்பியனானதால் நேபாளம் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

அதற்கு முன்னர் 12 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய நேபாளம் 11 வெற்றிகளை ஈட்டி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் விளையாட தகுதிபெற்றிருந்தது.

2018இல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அந்தஸ்தைப் பெற்ற நேபாளம் தற்போது அணிகள் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கிறது.


இந் நிலையில் தரவரிசையில் முதலாம் இடத்தில் உள்ள பாகிஸ்தானை நேபாளம் வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியாது.

மறுபுறத்தில் அண்மைக் காலமாக சகலதுறைகளிலும் பிரகாசித்துவரும் பாகிஸ்தான் இன்றைய போட்டியில் நேபாளத்திடம் இருந்து சவாலை எதிர்கொள்ளாது என்பது உறுதி.



அணிகள்

பாகிஸ்தான்: துடுப்பாட்ட வீரர்கள் - பாபர் அஸாம் (தலைவர்), அபுதுல்லா ஷபிக், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், இமாம் உல் ஹக், மொஹமத் ஹரிஸ், மொஹமத் ரிஸ்வான், சவ்த் ஷக்கீல். சகலதுறை வீரர்கள் - ஷதாப் கான் (உதவித் தலைவர்), அகா சல்மான், பாஹீம் அஷ்ரப், மொஹமத் நவாஸ், மொஹமத் வசிம். பந்துவீச்சாளர்கள் - ஹரிஸ் ரவூப், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி, உசாமா மிர்.

நேபாளம்: துடுப்பாட்ட வீரர்கள் - ஆரிப் ஷெய்க், ஆசிப் ஷெய்க், திபேந்த்ரா சிங் ஐரீ, குஷால் பூர்டெல், அர்ஜுன் சாத், பிம் ஷர்க்கி. சகலதுறை வீரர்கள் - ரோஹித் பவ்டெல் (தலைவர்), கரன் கே.சி., குஷால் மல்லா, ப்ராட்டிஸ் ஜி.சி., சோம்பால் கமி. பந்துவீச்சாளர்கள் - குல்சான் ஜா, சந்தீப் லமிச்சான், லலித் ராஜபான்ஷி, மௌசம் தகால், சந்தீப் ஜோரா, கிஷோர் மஹோட்டோ. 





பாகிஸ்தானை எதிர்த்தாடும் அறிமுக அணி நேபாளம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு