21,Nov 2024 (Thu)
  
CH
விளையாட்டு

இலங்கையின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் ஒருவர் உட்பட 8 பேர் மீது, சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐ.சி.சி ) ஊழல் குற்றச்சாட்டு

2021 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற அபுதாபி ரி10 லீக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்போது, போட்டிகளில் ஊழல் செய்ய முயன்றதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (19) வெளியிட்ட அறிக்கையொன்றில்  ஐ.சி.சி  தெரிவித்துள்ளது.


மேற்படி 8 பேரும் புனேடெவில் அணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இலங்கையின் முன்னாள் முதல்தர வீரரான சாலிய சமன் (37), பங்களாதேஷ் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் நசீர் ஹொசைன் (31) ஆகியோரும் இவர்களில் அடங்குவர்.

கிரிஷான் குமார் சௌத்திரி (அணியின் இணை உரிமையாளர்), பராக் சங்வி (அணியின் இணை உரிமையாளர்), ரிஸ்வான் ஜாவிட் (உள்ளூர் வீரர்), அஷார் ஸைதி (துடுப்பாட்ட பயிற்றுநுர்), சன்னி திலோன் (உதவிப் பயிற்றுநர்) ஷதாப் அஹமத் (அணி முகாமையாளர்) ஆகியோரே ஏனைய 6 பேரும் ஆவர்.

எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் சார்பில் இக்குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  


அபுதாபி ரி10 போட்டிகளின் ஒழுக்க விதி மீறல் தொடர்பில்,  சர்வதேச கிரிக்கெட் பேரவையை (ஐ.சி.சி) ஊழல் எதிர்ப்பு அதிகாரிகளாக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை  நியமித்திருந்தது.

நசீர் ஹொசைன் இறுதியாக 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷ் சார்பாக சர்வதேச போட்டியில் பங்குபற்றியவர்.

ஊழல் முயற்சி குறித்து முறைப்பாடு செய்யத் தவறியமை, 750 டொலர்களுக்கு அதிக பெறுமதியுடைய பரிசுப்பொருளை பெற்றமை தொடர்பில் தகவல் அளிக்கத் தவறியமை ஆகியன நசீர் ஹொசைன் மீதான குற்றச்சாட்டுகளில் அடங்கும்.  

போட்டியை அல்லது போட்டியின் பகுதிகளை நிர்ணயம் செய்ய முயற்சித்தமை, ஊழலில் ஈடுபடும் வீரருக்கு வெகுமதி அளிக்க முன்வந்தமை, நேரடியாக, ஒழுக்க விதிகளை மீறுவதற்குத் தூண்டியமை, விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுத்தமை முதலான குற்றச்சாட்டுகள் ஏனையோர் மீது  சுமத்தப்பட்டுள்ளன.


குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதிலளிப்பதற்கு  செப்டெம்பர் 19 முதல் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.  

 





இலங்கையின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் ஒருவர் உட்பட 8 பேர் மீது, சர்வதேச கிரிக்கெட் பேரவை ( ஐ.சி.சி ) ஊழல் குற்றச்சாட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு