19,May 2024 (Sun)
  
CH
சினிமா

ஜாக்கிங் போன இடத்தில் காதல் -நடிகை விசித்திரா

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத ஜாம்பவான்களாக இருந்தவர்கள் நடிகர் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களுடன் இணைந்து நடித்த பல நடிகர்கள் பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கவர்ச்சி நடிகை விசித்ராவும் ஒருவர். 15 வயது ஆகும்போதே சினிமாவில் நுழைந்து விட்டார்.


ஆரம்ப காலத்தில் துணை நடிகராக களத்தில் இறங்கிய இவர். பின்வரும் நாட்களில் கதாநாயகி, வில்லி, டான்சர், நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தினார். இந்நிலையில் தற்போது அவர் தனது காதல் - கணவர் - திருமணம் குறித்து பேசிய தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.


அந்த பேட்டியில், தெலுங்கு படம் ஒன்றிற்காக, தான் கேரளாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, அந்த ஹோட்டலில் தனது கணவர் ஷாஜி மேனஜராக இருந்தார் என குறிப்பிட்டு, அதிகாலை தான் வாக்கிங் செல்ல வேண்டும் என்று சொன்ன போது, அப்போது பாதுகாவலர் மறுத்துள்ள நிலையில், பிறகு ஜாக்கிங் இருவரும் சேர்ந்து செல்ல துவங்கியதே இவர்களுக்கு ஏற்பட்ட முதல் அறிமுகம் என தெரிவித்தார்.

அவ்வாறு துவங்கிய இவர்களின் பழக்கம், நாள் நாளாக வளர, தன்னுடைய பிறந்தநாளின் அவர் பூங்கொத்து கொடுத்து திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூற, அவ்வாறே காதல் கைகொடுத்தியது என விசித்திரா கூறினார்.


தான் ஒரு கிளாமரான நடிகை என்று ஷாஜிக்கு தெரியாது என்றும் தங்களின் திருமணம் காதல் திருமணம் என்பதால் தன் கணவர் அவரது வீட்டில் இருந்து எல்லாவற்றையும் விட்டு விட்டு தனக்காக வந்தார் என பூரிப்புடன் கூறிய விசித்திரா,திருமணம் நடந்த போது வித்தார்.


திருமணத்திற்கு பிறகு தாங்கள் கொடைக்கானலுக்கு ஹனிமூன் சென்று இருந்த போது தான், ரசிகர் ஒருவர் தன்னை அடையாளம் கண்டுக்கொள்ள அப்போதுதான் என்ன மாதிரியான நடிகை என்பதே தன் கணவருக்கு தெரிய வந்தது என்றும் அன்றிலிருந்து இப்பொது வரை ஷாஜி தன்னை மிகவும் பாதுகாப்பாக பார்த்துக்கொள்கிறார் என தெரிவித்துள்ளார்.

 




ஜாக்கிங் போன இடத்தில் காதல் -நடிகை விசித்திரா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு