03,Dec 2024 (Tue)
  
CH
விளையாட்டு

இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட்..! முதல் நாள் ஆட்டம் நிறைவு!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது. இன்றைய ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.


போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட ஆப்கானிஸ்தான் அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.


ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Rahmat Shah அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், பிரபாத் ஜயசூர்ய மற்றும் அசித பெர்ணான்டோ அகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.


இந்நிலையில் பதிலுக்கு தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிவரும் திமுத் கருணாரத்ன 42 ஓட்டங்களுடனும் மற்றும் நிஷான் மதுஷங்க 36 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.




இலங்கை, ஆப்கானிஸ்தான் டெஸ்ட்..! முதல் நாள் ஆட்டம் நிறைவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு