28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

இந்தியா பறந்தார் அனுரகுமார!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர். இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும் இருவரும் இன்று (05) காலை புதுடில்லிக்கு பயணித்ததாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார். தேசிய மக்கள் கட்சி முதலில் மக்கள் விடுதலை முன்னணியினால் கட்டமைக்கப்பட்டதுடன், அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியது.


இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் போது, ​​ மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே அதற்கு எதிராக செயல்பட்டு இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான ஒரு சித்தாந்தத்தை வழிநடத்தியது.


இந்தியாவின் தலையீட்டுடன் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படும் போது அவர்களுக்கு நடத்தப்பட்ட ஐந்து வகுப்புகளில் ​​ இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி கற்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறாயினும், சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவுடன் செயற்பட தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க அனுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




இந்தியா பறந்தார் அனுரகுமார!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு