02,May 2024 (Thu)
  
CH
விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வீரர் ஸாக் கிராலியின் விக்கெட்டினை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்தார் அஸ்வின்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரான அனில் கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக உள்ளார். அந்த சாதனைப் பட்டியலில் இரண்டாவது நபராக அஸ்வின் இணைந்துள்ளார். அஸ்வினுக்கு முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் (800 விக்கெட்டுகள்) மற்றும் அவுஸ்திரேலிய வீரர் நாதன் லயன் (517 விக்கெட்டுகள்) ஆகிய ஆஃப் ஸ்பின்னர்கள் இந்தப் பட்டியலில் ஏற்கனவே உள்ளனர்.


கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அஸ்வின் தனது 97-வது போட்டியில் 500 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 9-வது வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.




டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுக்களை வீழ்த்தி அஸ்வின் சாதனை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு