இந்தியா, ஆந்திர மாநிலம், மதனபள்ளி அடுத்த குண்டவாரி பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ரமணா ரெட்டி. இவரது மனைவி லஷ்மியம்மா. இவர்களுக்கு மனோகர் ரெட்டி, ஸ்ரீனிவாசலு ரெட்டி என 2 மகன்கள் உள்ளனர். விவசாய நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிலத்தை பாகம் பிரித்து தர வேண்டுமென சீனிவாசலு ரெட்டி பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதற்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த சீனிவாசலு ரெட்டி அவரது தாயின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்துச் சென்று கீழே தள்ளி காலால் சரமாரியாக உதைத்து தாக்கினார். இதனை தடுக்க வந்த தந்தையை பிடித்து கீழே தள்ளி மிதித்து கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவங்களை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களை கலங்க செய்தது. இதனைக் கண்ட பொலிசார் வெங்கட்ராமண ரெட்டி மற்றும் அவரது மனைவியிடம் புகாரை பெற்று சீனிவாசலு ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 Comments
No Comments Here ..