இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் இம்மாதம் 22 ஆம் திகதி துவங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மகேந்திர சிங் டோனி தலைவராக களமிறங்குவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், துவங்க இருக்கும் 2024 ஐ.பி.எல். தொடரில் புதிய ரோலை ஏற்க இருப்பதாக மகேந்திர சிங் டோனி தெரிவித்து இருக்கிறார். மேலும் புதிய பொறுப்பை ஏற்பதில் சுவாரஸ்யமாக இருப்பதாகவும் தெரிவித்து இருககிறார். டோனி ஏற்கவிருக்கும் புதிய பொறுப்பு என்னவென்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
0 Comments
No Comments Here ..