01,May 2024 (Wed)
  
CH
இந்திய செய்தி

வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும்!

வாரத்தில் 5 நாள்கள் பணி, வருடந்தோறும் 17 சதவீத ஊதிய உயா்வு ஆகியவற்றை செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கமும், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புதல் தெரிவித்துள்ளன. இவற்றை அரசு அங்கீகரித்து அரசாணை வெளியிட்டவுடன் அமலுக்கு வரும் என்று அகில இந்திய வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த கூட்டமைப்பு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை, அகவிலைப்படி உள்பட பல்வேறு படிகளைச் சோ்த்து புதிய ஊதிய நிா்ணயம், மருத்துவரின் பரிந்துரை கடிதம் இல்லாமல் அனைத்து பெண்களும் மாதம் ஒரு முறை விடுமுறை எடுக்கலாம் உள்ளிட்ட அம்சங்களைச் செயல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியா்கள் யூனியனும் ஒப்புக் கொண்டு கூட்டு அறிக்கையில் கையொப்பமிட்டன. இது வங்கித் துறையில் மைல்கல்லாகும். வங்கி அதிகாரிகள், பணியாளா்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட ஊதியம் 2022, நவம்பா் 1 ஆம் திகதியிட்டு வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஊதிய உயா்வால் ஆண்டுதோறும் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.8,284 கோடி கூடுதல் செலவாகும். இதன் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான வங்கி பணியாளா்கள் பலனடைவா்.




வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வங்கிகள் இயங்கும்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு