05,Dec 2024 (Thu)
  
CH
சினிமா

பல ஒஸ்கர் விருதுகளை குவித்த "ஓபன்ஹெய்மர்"!

96-வது ஒஸ்கர் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வரும் நிலையில், ஓபன்ஹெய்மர் சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளது.  அதேபோல் சிறந்த நடிகர் விருதையும் வென்றுள்ளது. அந்தப் படத்தில் நடித்துள்ள சிலியான் முர்பி (Cillian Murphy) இந்த நடிகர் விருதை பெற்றுள்ளார். 

சிறந்த இயக்குனர் விருதையும் ஓபன் ஹெய்மர் வென்றுள்ளது. அந்த படத்தினர் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் வென்றுள்ளார். சிறந்த படத்திற்கான விருதையும் இத்திரைப்படம் வென்றுள்ளது. அதேபோல் புவர் திங்ஸ் படம் சிறந்த புரோடக்சன், சிறந்த ஆட வடிவமைப்பு, சிறந்த ஒப்பனை மற்றும் ஹேர்ஸ்டைல் ஆகியவற்றுக்கான விருதுகளை வென்றுள்ளது. 


சிறந்த நடிகைக்காக விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடித்த எம்மா ஸ்டோன் சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சிறந்த ஆவண குறும்படம் விருதை தி லாஸ்ட் ரிப்பைர் ஷாப் படம் வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படமாக 20 டேஸ் இன் மரியுபோல் என்ற படம் வென்றுள்ளது. சிறந்த லைவ்-ஆக்சன் படமாக தி வொண்டர்புல் ஸ்டோரி ஆஃப் ஹென்ஹி சுகர் படம் வென்றுள்ளது. சிறந்த அனிமேசன் குறும் படமாக வார் இஸ் ஓவர்! பை தி மியூசிக் ஆப் ஷான் அண்டு யோகோ படம் வென்றுள்ளது. சிறந்த அனிமேசன் படமாக தி பாய் அண்டு தி ஹெரோன் படம் வென்றுள்ளது.




பல ஒஸ்கர் விருதுகளை குவித்த "ஓபன்ஹெய்மர்"!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு