சுற்றுலா இலங்கை அணிக்கும், பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. சிட்டகொங்கில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணி சார்பில் Janith Liyanage அதிகபடியாக 67 ஓட்டங்களையும், அணியின் தலைவர் Kusal Mendis 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Shoriful Islam, Taskin Ahmed, Tanzim Hasan Sakib ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதன்படி 256 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 44.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto ஆட்டமிக்காமல் அதிகபடியாக 122 ஓட்டங்களை பெற்றதுடன் Mushfiqur Rahim ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Dilshan Madushanka 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதன்படி 03 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலையில் உள்ளது.
0 Comments
No Comments Here ..