27,Apr 2024 (Sat)
  
CH
சினிமா

நடிகர் விஜய் முடிவில் திடீர் மாற்றம்!

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருந்த நிலையில் அது திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த பின்னர் வரும் முதல் தேர்தல் இது. இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில்தான் போட்டியிட உள்ளதாகவும் விஜய் அறிவித்திருக்கிறார். 

எனினும் கட்சி மற்றும் மக்களவைத் தேர்தல் தொடர்பாக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  கட்சியின் தலைவர் விஜய் இதில் பங்கேற்கவில்லை என்றாலும் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடர்ந்து ஆலோனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. 


இந்தத் தேர்தலில் மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது மக்கள் தலைவர்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது குறித்து மாவட்ட நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்திடம் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதுபோன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது. 


ஆனால் அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக திடீரென அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுதான் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக வரும் நாட்களில் போடப்பட்டிருந்த மற்ற சில திட்டங்களையும் ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என விஜய் ஏற்கெனவே தெளிவாக கூறிவிட்டாலும், அவரது ஆதரவைப் பெற பெரிய கட்சிகள் முயற்சி செய்து வருகிறதாம். இதுகுறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்படும் என நிர்வாகிகள் எதிர்பார்த்த நிலையில், அத்தகைய சங்கடத்திற்கு ஆளாக வேண்டாம் என்றுதான் ஆலோசனை கூட்டத்தை விஜய் ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.





நடிகர் விஜய் முடிவில் திடீர் மாற்றம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு