15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

இந்தியாவின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து இந்திய அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கில் அவருக்கு கடந்த 16 ஆம் திகதி பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் இன்று (21) மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் விசாரணைக்கு ஆஜரானால் கைதுசெய்ய மாட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, முதல் மந்திரி கெஜ்ரிவால் முன் வைத்த கோரிக்கையை நிராகரித்தார். கெஜ்ரிவால் கோரிக்கையின் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என தெரிவித்தனர்.


இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு