இந்திய மக்களவைத் தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 111 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலையே பாஜக வெளியிட்டுள்ளது.இதில், இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் மண்டி தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து, பாஜகவில் இணைந்த நவீன் ஜிண்டால் அரியானா குருஷேத்ரா தொகுதியில் போட்டியிடுகிறார். கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே.சுரேந்திரன் போட்டியிடுகிறார். இவர், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்கொள்கிறார். ஒடிசா சம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிடுகிறார். உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் மேனகா காந்தி போட்டியிடுகிறார்.
ஜார்கண்ட் மாநிலம் தும்கா தொகுதியில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன் போட்டியிடுகிறார். ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ராம ராவின் மகளும், அம்மாநில பாஜக தலைவருமான புரந்தேஷ்வரி, ஆந்திராவின் ராஜாமுந்திரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
0 Comments
No Comments Here ..