பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். இப்படத்தை ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் பகிர்ந்துள்ளார். “படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்”தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்”
என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு உள்ளார். நயன்தாரா அடுத்ததாக ‘டெஸ்ட்’ மற்றும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ ஆகிய படங்களில் நடிக்கிறார்.அவை தயாரிப்பின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. அவர் கடைசியாக ‘அன்னபூரணி’ படத்தில் நடித்தார்.
0 Comments
No Comments Here ..