15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறும் மோடி அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய அரசாக மோடி அரசு செயற்பட்டு கொண்டிருக்கிறது என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கைது, அபராதம், படகுகள் பறிமுதல் என மோடி ஆட்சியில் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை அரசு அறிவிக்கப்படாத போர் ஒன்றையே நடத்திக்கொண்டிருக்கிறது.

கச்சத்தீவு மீட்கப்படும் என்றார் சுஸ்மா சுவராஜ் கூறியது என்ன ஆனது. இப்போது வரை அந்த வாக்குறுதியை மத்திய பாரதிய ஜனதா அரசு நிறைவேற்றவில்லை. தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறும் மோடி அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு. இந்தநிலையில் கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறிய மோடி எந்த முகத்தை வைத்து வாக்கு கேட்க வருகிறார்.இதற்கிடையில் இராமேஸ்வரத்தையும் தனுஸ் கோடியை இணைப்போம் என்றார்கள்.அதையும் செய்யவில்லை. இராமேஸ்வரத்திற்கும் தனுஸ்கோடிக்கும் தூரம் இல்லை. மோடியின் மனதிற்கும் தமிழ்நாட்டிற்கும் தான் தூரம் என அவர் தெரிவித்துள்ளார்.





தமிழக கடற்றொழிலாளர்களின் நலனைக் காக்கத் தவறும் மோடி அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு