கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமிக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அபிராமிக்கு திருமணம் நடந்தது. இவரது கணவரும் ஒரு மருத்துவர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் அபிராமியின் தற்கொலைக் கடிதம் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், வாழ்க்கை சோர்ந்து போகிறது என்றும் தற்கொலைக் கூறப்பட்டுள்ளது. பணிபுரிந்து வந்த மருத்துவக் கல்லூரிக்கு அருகே உள்ள பி.டி.சாக்கோ நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார் அபிராமி. அதே வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அபிராமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
அபிராமி தற்கொலை செய்து கொள்ள எந்த காரணமும் இல்லை என்று குடும்பத்தினர் கூறியுள்ள நிலையில், தற்கொலைக்கான காரணம் குறித்து என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மருத்துவமனையின் சக ஊழியர்கள், நண்பர்களிடம் மேலும் பல தகவல்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மகள் அபிராமியை போனில் தொடர்பு கொள்ள முடியாததால், தாய் ரமாதேவி வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் கதவை தட்டியும் நீண்ட நேரமாக திறக்காததால், பின்பக்க ஜன்னல்களை உடைத்து பார்த்தபோது, அபிராமி அறையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பின்னர் கதவு உடைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக கூறப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவக்கல்லூரி அருகே உள்ள இந்த வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்துள்ளார் அபிராமி.
மயக்க மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அபிராமியின் கணவர் கொல்கத்தாவில் பணிபுரிந்து வரும் நிலையில், தான் இன்று மார்ச் 27ம் தேதி, கொல்லத்தில் உள்ள கணவரிடம் செல்ல இருப்பதாக அபிராமி கூறியதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
0 Comments
No Comments Here ..