15,Jan 2025 (Wed)
  
CH
விளையாட்டு

பங்களாதேஷ் ஊடகங்களை வெளுத்து வாங்கிய தனஞ்சய!

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை (30) ஆரம்பமாகவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான பங்களாதேஷ் அணிக்கு ஷகிப் அல் ஹசன் மீள அழைக்கப்பட்டமை தொடர்பில் இன்று (29) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு தனஞ்சய டி சில்வா இவ்வாறு பதிலளித்தார்.

கேள்வி - ஷகிப் போட்டிக்கு அழைக்கப்பட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

தனஞ்சய டி சில்வா - "இப்போது என்னால் எதுவும் கூற முடியாது."

கேள்வி - ஷகிப்பைப் பற்றி இப்போது எதுவும் கூற மாட்டீர்களா?

தனஞ்சய டி சில்வா - "நான் எதற்கு கூற வேண்டும்? அவர் எனது அணியில் இல்லை. நீங்கள் பங்களாதேஷ் அணியிடம்தான் கேட்க வேண்டும்."




பங்களாதேஷ் ஊடகங்களை வெளுத்து வாங்கிய தனஞ்சய!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு