பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை தட்டுப்பாடு இன்றி வழங்க முடியும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சியை 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அதன் தலைவர் திரு.அஜித் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் சுமார் நான்கு மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என அதன் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
0 Comments
No Comments Here ..