ஐபிஎல் தொடரின் பயணம் குறித்து அஸ்வின் மனம் திறந்துள்ளார். 2024 ஐபிஎல் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில், "சில சமயங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தானா? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் பல சமயங்களில் விளையாட்டு பின்னே சென்று விடுகிறது. அது மிகவும் பெரியது. விளம்பர படப்பிடிப்புகளுக்காக நாங்கள் பயிற்சி செய்து கொண்டு இருக்கிறோம். அந்த இடத்துக்கு ஐபிஎல் வந்துள்ளது.
ஐபிஎல்-க்கு நான் வரும் போது ஒரு இளைஞனாக, பெரிய வீரர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்பினேன். 10 வருடங்கள் கழித்து ஐபிஎல் எப்படி இருக்கும் என்று அப்போது நான் நினைக்கவில்லை. பல சீசன்கள் ஐபிஎல்லில் இருந்ததால், ஐபிஎல் மிகப்பெரியது என்று என்னால் சொல்ல முடியும். ஐபிஎல்லில் இருக்கும் வளர்ச்சியை யாரும் எதிர்பார்க்கவில்லை. சிஎஸ்கேயில் இருந்தபோது ஸ்கொட் ஸ்டைரிஸுடன் பேசியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஐபிஎல் ஆரம்ப சீசன்களில் டெக்கென் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடும் போது, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஐபிஎல் நீடிக்கும் என்று நினைக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments
No Comments Here ..