மத்திய பிரதேசம், மாதவ் நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஒரு பெண்ணுடன் 6 இளைஞர்கள் தங்கியிருந்துள்ளனர். சந்தேகத்தின் பேரில் போலீஸார் அவர்களை விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. 7 பேரும் போலியான கால்சென்டரை ஓட்டல் அறையில் அமைத்து அதன் மூலமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டவரை பல நாட்களாக ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர். பிரபல மென்பொருள் நிறுவனமான பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பணியாளர்கள் எனக் கூறியுள்ளனர்.
ஆங்கிலம் பேசியும், லேப்டாப், ஹெட்ஃபோன்களை மாட்டிக் கொண்டும் வெளிநாட்டவரை ஏமாற்றிக் கொண்டிருந்துள்ளனர். வாடிக்கையாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடம் இருந்து சேவைக்கான கட்டணத்தை ஏமாற்றி பெற்று வந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு 8 லேப்டாப், 15 செல்போன்கள் மற்றும் பல கேட்ஜெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அபய் ரஜாவத், நித்தேஷ் குமார், தீபக் தாபா, பர்வேஸ் ஆலம், ஸ்வேதா பார்தி, ராஜ் கைலாஸ்கர், சுரேஷ் வாசல் என்பது தெரியவந்துள்ளது.
0 Comments
No Comments Here ..