இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
ஹமில்ரனில் பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இன்றைய முதலாவது போட்டி இலங்கை நேரப்படி காலை 7.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள் என அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
உபாதை காரணமாக இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா, நியூஸிலாந்து எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் சர்வதேச மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் தொடர்பான அறிவித்தலை அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே.எல். ராகுல் 5 ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக களமிறங்குவார் என்றும் விராட் கோலி கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..