இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
கேப்டவுன் மைதானத்தில் இடம்பெற்ற குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இங்கிலாந்து அணி சார்பாக டென்லி 87 ஓட்டங்களையும் வோர்க்ஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் ஷம்சி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 47.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
தென்னாபிரிக்க அணி சார்பாக குயின்டன் டி கொக் 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததோடு புவாமா 98 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக குயின்டன் டி கொக் தெரிவானதோடு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க அணி 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..