08,Apr 2025 (Tue)
  
CH
சினிமா

பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டேவிற்கு மாரடைப்பு!

பிரபல மராட்டிய நடிகர் சாயாஜி ஷிண்டே. இவர் தமிழில் பாரதி, அழகி, பாபா, தூள், அழகிய தமிழ் மகன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர நடிகராக வலம் வரும் இவர் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தை சேர்ந்த சாயாஜி ஷிண்டே நடிகராக மட்டுமின்றி பசுமை ஆர்வலராகவும் வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகர் சாயாஜி ஷிண்டே நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாயாஜி ஷிண்டே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில், அவருக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சதாராவில் உள்ள பிரதிபா மருத்துவமனையில் சாயாஜி ஷிண்டே சிகிச்சை பெற்று வருகிறார். அவரது இதய குழாய்களில் ஒன்று 99 சதவிகிதம் அடைக்கப்பட்டுவிட்டதாகவும் , இதன் காரணமாக அவருக்கு உடனடியாக ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. 




பிரபல நடிகர் சாயாஜி ஷிண்டேவிற்கு மாரடைப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு