15,Jan 2025 (Wed)
  
CH
சினிமா

நடிகை பாவனா போட்ட அதிர்ச்சி பதிவு!

நீதிமன்றத்தில் எனது தனியுரிமை பாதுகாப்பாக இல்லை என்பது அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது. கோட்டைக்கட்டி, பாதிக்கட்டவரின் நீதியை பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது” என நடிகை பாவனா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை பாவனா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லைக்கு உள்ளானார். இதில் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். அந்தச் சமயத்தில் , இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாவனாவுடன் 12-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்த திலீப்பின் பெயரும் இதில் இடம் பெற்றிருந்ததது. ஆனால், திலீப் இந்த குற்றச்சாட்டை மறுத்த போதிலும், அவர் கைது செய்யப்பட்டு ஜாமீன் கிடைக்கும் வரை 3 மாதங்கள் சிறையில் இருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் வேளையில் தன்னுடைய சமூகவலைதளப்பக்கத்தில் அதிர்ச்சி தரும் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். நடிகை பாவனா. “இது அதிர்ச்சி அளிக்கிறது! மாண்புமிகு உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, எனது வழக்கு தொடர்பான மெமரி கார்டின் ஹாஷ் மதிப்பில் ஏற்பட்ட மாற்றம் குறித்து, விசாரணை நீதிமன்றம் நடத்திய நீதி விசாரணை அறிக்கை எனக்கு கிடைத்துள்ளது.


தனியுரிமை ஒருவரின் அடிப்படை உரிமை. ஆனால், என் வழக்கின் ஹாஷ் மதிப்பு இப்படி பலமுறை மாற்றப்பட்டுள்ளது. அதிர்ச்சியளிக்கிறது. இந்த நீதிமன்றத்தில் தற்போது எனது தனியுரிமை பாதுகாப்பாக இல்லை என்பதை அறிந்து மிகவும் பயமாக இருக்கிறது. ஒரு கோட்டைக் கட்டி, பாதிக்கப்பட்டவரின் நீதியைப் பலப்படுத்த வேண்டிய நீதிமன்றத்தில் இருந்து இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கும்போது அது காயப்பட்ட மனிதர்களை வருத்தப்பட வைத்து துரோகிகளை பெருமைப்பட வைக்கிறது. இருந்தாலும், நீதித்துறை மீதான நம்பிக்கை இன்னும் எனக்கு குறையவில்லை. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்து போராடுவேன்” எனத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.





நடிகை பாவனா போட்ட அதிர்ச்சி பதிவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு