15,Jan 2025 (Wed)
  
CH
விளையாட்டு

ஒரே ஓவரில் 6 சிக்சர் - மற்றொரு சாதனை!

ஆசிய கிரிக்கெட் சபை சார்பில் பிரிமீயர் கிண்ணத்திற்கான டி20 கிரிக்கெட் போட்டி ஓமன் நாட்டில் நடந்துவருகிறது. இதில் அல் எமிரேட்டில் நேற்று நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் நேபாளம், கட்டார் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய நேபாள அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்குள் இழப்புக்கு 210 ஓட்டங்களை குவித்தது. 

அந்த அணியின் திபேந்திர சிங் அய்ரீ, வேகப்பந்து வீச்சாளர் கம்ரன் கான் வீசிய கடைசி ஓவரில் 6 பந்துகளிலும் தொடர்ந்து 6 சிக்சர்களை விளாசி 36 ஓட்டங்களை எடுத்திருந்தார். இதன்மூலம் திபேந்திர சிங் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசிய 3-வது வீரர் என்ற சாதனை படைத்தார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர், யுவராஜ் சிங் (2007), மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் பொல்லார்ட் (2021) ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதம் அடித்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




ஒரே ஓவரில் 6 சிக்சர் - மற்றொரு சாதனை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு