15,Jan 2025 (Wed)
  
CH
விளையாட்டு

மும்பை வீரர்களை மிரட்டிய மத்திஷ!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக நேற்று (14) இடம்பெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

அந்த போட்டியில் அபாரமாக பந்துவீசிய மத்திஷ பத்திரன 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மத்திஷ பத்திரனவின் பந்து வீச்சு வீடியோ

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணி சார்பில் சிவம் துபே ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களை எடுத்தார். அணியின் தலைவர் Ruturaj Gaikwad 69 ஓட்டங்களை பெற்றதுடன் இறுதியாக களமிறங்கிய மகேந்திரசிங் தோனி 04 பந்துகளுக்கு முகம் கொடுத்து 3 சிக்ஸர்களை விளாசி 20 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

தோனியின் துடுப்பாட்ட வீடியோ

பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் ரோகித் சர்மா ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களை எடுத்திருந்தார்.




மும்பை வீரர்களை மிரட்டிய மத்திஷ!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு