06,Apr 2025 (Sun)
  
CH
இந்திய செய்தி

தீபிகா படுகோன் முதல் அசின் வரை.. பல நடிகைகளுடன் காதல்!! தல தோனியின் மறுபக்கம்..!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனி தலைமையில் இந்திய பல போட்டிகளில் வென்றுள்ளது. இவர் கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தினாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் சில கிசுகிசுக்களில் சிக்கி இருக்கிறார்.

பிரியங்கா

தோனி, பிரியங்கா என்பவரை காதலித்து வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு விபத்தில் பிரியங்கா இறந்து விட்டார். இதை பற்றி தோனியின் வாழ்க்கை படமான எம் எஸ் தோனி படத்தில் காட்டி இருப்பார்கள்.

தீபிகா படுகோன்

தோனி டி20 போட்டிகளில் தீவிரமாக விளையாடிய சமயத்தில் பிரபல பொலிவுட் நடிகை தீபிகா படுகோன் உடன் கிசுகிசுப்பட்டார். இவர்கள் அடிக்கடி வெளியில் பைக்கில் ஊர் சுற்றுவதாகவும் வதந்திகள் வந்தன. ஆனால் இதற்கு அவர்கள், நாங்கள் காதலிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துவிட்டார்கள்.

ப்ரீத்தி சிமோஸ்

பிரபல தொலைக்காட்சி நடிகையாக இருந்தவர் தான் ப்ரீத்தி சிமோஸ். இவருக்கு கிரிக்கெட் மீது அதிக அளவில் ஆர்வம். இவரும் தோனியும் அடிக்கடி டேட்டிங் சென்றதாக தகவல் வெளியானது.

லட்சுமி ராய்

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் லட்சுமி ராய் . இவரும் தோனியும் நீண்ட நாள் காதலித்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. இருவரும் அடிக்கடி பார்ட்டிகளில் ஒன்றாகத் தென்பட்டனர். ஆனால் லட்சுமி ராய், ’நானும் தோனியும் நல்ல நண்பர்கள், காதல் என்றெல்லாம் பேசி களங்கம் செய்யாதீர்கள்’ என்று பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

அசின்

ஒரு பிரபல நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடராக நடிகை அசினும், தோனியும் இருந்தனர். அந்த சமயங்களில் இருவருக்குமான சந்திப்புகள் அதிகமாக நடந்ததால், சமூக வலைத்தளங்களில் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. 




தீபிகா படுகோன் முதல் அசின் வரை.. பல நடிகைகளுடன் காதல்!! தல தோனியின் மறுபக்கம்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு