குஜராத் கடற்கரையில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பயங்கரவாத தடுப்பு படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குஜராத் கடற்கரையில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை அவர்கள் கண்டுபிடித்தனர். சுமார் 86 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைதுசெய்தனர்.
இதன் மதிப்பு 600 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12 ஆம் திகதி குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் குஜராத்தில் கடலோர பொலிஸாரால் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..