22,Aug 2025 (Fri)
  
CH
இந்திய செய்தி

லிப்டில் சென்ற சிறுமியைக் கடித்துக் குதறிய நாய்!!

இந்தியா - உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் லிப்டில் சிறுமியை நாய் கடித்து குதறிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மே 3 ஆம் திகதி நடந்ததாகக் கூறப்படும் இந்த முழு சம்பவமும் லிப்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், லிப்டிற்குள் இருக்கும் சிறுமியை 4-வது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு வருகிறார். பின்னர் லிப்ட் 2-வது மாடியில் நின்றதும் ஒரு செல்லப்பிராணி லிப்ட்டுக்குள் நுழைந்து தனியாக இருந்த சிறுமியைக் கடிக்கிறது.

சிறுமியை நாய் கடித்தபோது ஒரு நபர் லிப்டிற்குள் சென்று நாயை விரட்டியடித்து, சிறுமியை மேலும் நாய் கடியில் இருந்து காப்பாற்றுகிறார். அந்த நபர் லிப்டில் இருந்து நாயை விரட்டியவுடன் கதவு மூடப்பட்டதும் சிறுமி வலியால் துடிக்கிறார். லிப்ட்டின் கதவு மூடப்பட்டவுடன், சிறுமி வலியுடன் கையை அசைப்பதை வீடியோவில் காணமுடிகிறது.

சென்னையில் உள்ள பூங்காவில் இரண்டு செல்லப்பிராணி நாய்களால் தாக்கப்பட்டதில் ஐந்து வயது சிறுமி பலத்த காயம் அடைந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





லிப்டில் சென்ற சிறுமியைக் கடித்துக் குதறிய நாய்!!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு