ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் குஜராத் டைடன்ஸ் அணி இமாலய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் அணிகளுக்கு இடையில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் குஜராத் டைடன்ஸ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் சதமடித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
அதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரே இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
சுப்மன் கில் 52 பந்துகளுக்கு 102 ஓட்டங்களையும், சாய் சுதர்ஷன் 50 பந்துகளில் 103 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.
குஜராத் டைடன்ஸ் அணி சற்றுமுன்னர் வரை 17 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 209 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.
0 Comments
No Comments Here ..