நியூசிலாந்து வீரர் கொலின் முன்ரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளார்.
37 வயதான முன்ரோ 2013 முதல் 2020 வரை நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார்.
ஒரு டெஸ்ட் போட்டி, 57 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்திய அவருக்கு 2020க்கு பிறகு தேசிய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இருப்பினும், இந்த ஆண்டு 2020 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் கொலின் முன்ரோ இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் அந்த அணியில் இடம்பெறவில்லை.
0 Comments
No Comments Here ..