31,Dec 2025 (Wed)
  
CH
சினிமா

நடிகை லைலா கான் கொலை வழக்கு - கணவனுக்கு மரண தண்டனை!

 நடிகை லைலா கான், அவரது தாயார் மற்றும் லைலாவின் நான்கு குழந்தைகளை கொலை செய்ததாக லாலா கானின் தாயாரின் 3-வது கணவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொலை செய்ததுடன் தடயங்களை அழித்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்றது. இது தொடர்பாக மும்பையில் உள்ள செசன்ஸ் நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணை முடிந்த நிலையில் லைலா கான், அவரது தாயார், லைலாவின் நான்கு குழந்தைகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் லைலா கானின் தாயாரின் 3-வது கணவர் பர்வேஸ் தக் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

24- ஆம் திகதி (இன்று) தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதன்படி இன்று பர்வேஸ் தக்கிற்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் உள்ள இகாட்பூரியில் உள்ள அவர்களுடைய பங்களாவில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த கொலை நடைபெற்றது.

செலினாவின் சொத்து தொடர்பாக செலினாவுக்கும்- பர்வேஷ் தக்கிற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தக் முதலில் செலினாவை கொலை செய்துள்ளார். பின்னர் லைலா கான் மற்றும் அவரது நான்கு குழந்தைகளை கொலை செய்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் பொலிசாரால் தக் கைது செய்யப்பட்ட பின் கொலை நடந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. அடையாளம் தெரியாத அளவிற்கு உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. தக்கிற்கு எதிராக 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 13 வருடங்கள் கழித்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.






நடிகை லைலா கான் கொலை வழக்கு - கணவனுக்கு மரண தண்டனை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு