என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடிகை அஜித் குமாருக்கு மகளாக நடித்து குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்து வந்தார்.
14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்ற அனிகா, போகப்போக கிளாமர் லுக்கிற்கு மாறி அதுவும் நடிகை நயன் தாரா லுக்கில் போட்டோஷூட் எடுத்து ரசிகர்களை மயக்கி வந்தார். சமீபத்தில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகி, ஹீரோவுடன் படுக்கையறை காட்சியில் நடித்து ஷாக் கொடுத்தார். தற்போது நடிகர் தனுஷ் இயக்கும் ராயன் படத்தில் நடித்தும் வருகிறார்.
சமீபத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் PT Sir படத்தில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அப்படத்தின் பிரமோஷனுக்காக பேட்டியளித்து வரும் அனிகா, இந்த படத்தில் ஏன் நடித்தோம் என்று தோன்றி இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதற்கான பதில் என்னிடம் இருக்கிறது, ஆனால், என்னால் அதை வெளியில் கூறமுடியாது. சொன்னால் என் வாழ்க்கை போய்விடும். அது ஒரு படம் தான், சமீபத்தில் தான் வெளியானது அந்த படம் என்று அனிகா கூறியிருக்கிறார்.
0 Comments
No Comments Here ..