11,Nov 2024 (Mon)
  
CH
சினிமா

பெற்றோரின் திருமணத்தை பார்த்த விஜய்!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து முடித்து அவரின் அடுத்த 69வது படத்தின் ஷூட்டிங்கிற்காக காத்திருக்கிறார். இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் விஜய்யின் அரசியல் குறித்து அவரின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, தன் வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் எப்படிவும் உண்டு என்றும் அவருடன் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

தன் மனைவியுடன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். இந்நிலையில், விஜய்யின் பெற்றோர் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட விஷயமும் புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது 1973ல் ஷோபாவை இந்து முறைப்படி எஸ் ஏ சந்திரசேகர் திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் 1974ல் மகன் விஜய் பிறந்திருக்கிறார். பின் விஜய்யின் தந்தை கிறிஸ்துவ மதத்தினர் என்பதால் அந்த முறைப்படி திருமணம் செய்து கொள்ள நினைத்துள்ளார். இந்து முறைப்படி திருமணம் செய்து சில ஆண்டுகள் கழித்து, விஜய் வளர்ந்தப்பின் கிறிஸ்துவ முறைப்படி ஷோபாவை இரண்டாம் முறை திருமணம் செய்திருக்கிறார் எஸ் ஏ சந்திரசேகர்.

விஜய்க்கு 6வது இருக்கும் நிலையில் பெற்றோர்களின் திருமணத்தையே பார்த்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




பெற்றோரின் திருமணத்தை பார்த்த விஜய்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு