இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், எந்த கூட்டணி எத்தனை இடங்கள் வெல்லும் என `வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு' முடிவுகளை அந்நாட்டின் பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் திகதி ஆரம்பமான இந்த தேர்தல் ஜூன் 1 (இன்று) வரை 7 கட்டங்களாகத் நடந்து முடிந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4-ம் திகதி வெளியாகவிருக்கும் நிலையில், இந்தியா முழுவதும் எந்தக் கூட்டணி எத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகளை நடத்தி, அதன் முடிவுகள் வௌியிடப்பட்டுள்ளன.
இதன்படி India News- D- Dyanimcs வௌியிட்டுள்ள கருத்து கணிப்பில், பாஜக கூட்டணி (NDA) 359 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி (INDIA) 154 தொகுதிகளிலும் ஏனையவை 30 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
அதேநேரம், PMARQ மற்றும் Republic TV + PMARQ-Matrize ஆகியவையும் மேற்குறிப்பிட்டுள்ள கருத்து கணிப்பையே வௌியிட்டுள்ளது.
Matrize வௌியிட்டுள்ள கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி (NDA) 353 - 368 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி (INDIA) 118 - 133 தொகுதிகளிலும் ஏனையவை 43 - 48 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் பாஜக கூட்டணி (NDA) 365 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி (INDIA) 140 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என Timesofindia வௌியிட்டுள்ள கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தை பொறுத்த வரை திமுக இணைந்துள்ள இந்தியா கூட்டணியே வெற்றி பெறும் என பல கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
India Today கருத்து கணிப்பில்
இந்தியா கூட்டணி = 33 - 37
பாஜக கூட்டணி = 2 - 4
அதிமுக + = 0 - 2
மற்றவை = 0
CNN + News 18
இந்தியா கூட்டணி - 36 -39
பாஜக கூட்டணி = 1 - 3
அதிமுக+ = 2
மற்றவை = 0
0 Comments
No Comments Here ..