17,Sep 2024 (Tue)
  
CH
இந்திய செய்தி

பாஜக தோல்வி – நடுரோட்டில் மொட்டை அடித்த நிர்வாகி!

இந்திய நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், மூன்றாவது முறை இந்தியப் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.இந்நிலையில் தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடுரோட்டில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஒருவர் கோவையில் பாஜக வெற்றி பெறும் என மாற்றுக் கட்சி நபர்களிடம் பந்தயம் கட்டியுள்ளார்.

ஒருவேளை பாஜக கோவையில் தோற்றுவிட்டால் அனைவர் முன்னிலையிலும் பஜாரில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொள்வதாக சவால் விட்டிருந்தார்.

இந்நிலையில் கோவையில் பாஜக தோல்வியைத் தழுவிய நிலையில் பாஜக நிர்வாகி ஜெய்சங்கர் தூத்துக்குடியின் பரபரப்பான ரோட்டில் மொட்டை அடித்துக் கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.




பாஜக தோல்வி – நடுரோட்டில் மொட்டை அடித்த நிர்வாகி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு