நடிகர் சரத்குமார் மீது தனுஷின் தாய் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.சென்னை தி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வரும் நடிகர் தனுஷின் தாய் விஜயலட்சுமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் திருநாவுக்கரசு, நுஷ்ரத் அபிதா ஆகியோருடன் சேர்ந்த இந்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.
இது நடிகர் சரத்குமார் எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவாகும். அம்மனுவில், உரிய அனுமதிகளை பெற்று முறைப்படி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் திறந்தவெளி மேல்தளத்தை (மாடி) மற்றவர்கள் பயன்படுத்துவதை குடியிருப்புவாசிகள் சிலர் தடுக்கின்றனர்.
மேலும், குடியிருப்பின் தரைத்தளத்தின் பொது பகுதிகளை ஆக்கிரமித்து வணிக ரீதிக்காக சட்டவிரோதமாக நடிகர் சரத்குமார் பயன்படுத்துகிறார் என்றும் இது தொடர்பாக, சென்னை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அம்மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இம்மனது நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக பதிலளிக்க சென்னை மாநகராட்சி மற்றும் நடிகர் சரத்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
0 Comments
No Comments Here ..