இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி. கர்ப்பிணியான இவர் கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 108 எம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது.
இதனை தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் எம்புலன்ஸ் மூலம் அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..