இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா 50 பந்துகளில் 81 ஓட்டங்களில் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து 229 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது.
துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சாய் சுதர்ஷன் 49 பந்துகளில் 80 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
இந்த வெற்றியின் ஊடாக நாளைய தினம் இடம்பெறவுள்ள இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதிக்காண் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
நாளைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதவுள்ளது.













0 Comments
No Comments Here ..